நபி வழியில் நம் வுழு(06)

Sunday, November 4, 2012

வுழுவின் சிறப்புக்கள்
இஸ்லாம் மார்க்கம் இறைவனுக்குச் செய்யும் சட்டங்களை மட்டும் சொல்லிக்கொண்டிராமல் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான தூய்மையைப் பற்றியும் பல இடங்களில் வலியுறுத் தியுள்ளது.  இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் போதும் இந்த தூய்மை கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகிறது.
ஒருவர் ஐவேளைத் தொழும் போது முகம், கை, கால், தலை மற்றும் வாய், மூக்கு ஆகியவற்றை தூய்மை செய்கிறார். இவ்வாறு செய்த பின்னரே தொழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. 
                                                                                                                           
இஸ்லாத்தின் ஒழுங்குகளை கடைபிடிக்கும் ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஐந்து தடவை தன் உடலின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்துவிடுகின்றான். இதைப் போன்று, சிறுநீர் கழித்தாலோ, மலம் கழித்தாலோ அவன் தண்ணீரால் தூய்மை செய்யவும் கட்டளையிடப்பட்டுள்ளது. சிறுநீர் மூலம் ஏராளமான நோய்கள் தொற்றுகின்றன. எனவே சிறுநீர் கழிப்பதில் ஒருவர் தூய்மையை கடைபிடித்தால் அவரிடம் பெரும்பாலான நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.    உடலுறவு கொண்ட பின்னரும் அவர்கள் தம் மர்ம உறுப்புகளை தூய்மை செய்ய வேண்டும் என்றும் பின்னர் குளித்து தூய்மையாகிக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. இந்த தூய்மையின் மூலமாக அந்தரங்க உறுப்புகள் பல நோய்களிலிருந்து   விடுதலை பெற முடியும்.    

                      

தற்போது உலகத்தை பயமுறுத்திக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலின் ஹெச்1 என்1 வைரஸ் தொற்று அதிகமாக வாய், நாசி வழியாக பரவுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் வாய் மற்றும் நாசியை தொடர்ந்து சுத்தமாக வைத்திருந்தால் இந்த பயங்கர நோயிலிருந்து விடுதலை பெறலாம். ஒருவர் ஐவேளைத் தொழுபவராக இருந்து உளூச் செய்யும்போது வாய் மற்றும் நாசியை தூய்மை செய்து வந்தால் இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.  இது வுழு செய்வதினால் மனித குலத்திற்கு கிடைத்த லௌகீக ரீதியான நன்மைகளில் ஒன்று.    எனவே தான் இஸ்லாம் வுழு எனும் அங்கத்த்துய்மைக்கு ஆண்மீக ரீதியாக பல சிறப்புக்களையும் அந்தஸ்துக்களையும் வழங்கியுள்ளது

                      
இஸ்லாத்தின் சின்னம் வுழு
1 - حدثنا أبو يعقوب يوسف بن واضح الهاشمي ثنا المعتمر بن سليمان عن أبيه عن يحيى بن يعمر قال : قلت : - يعني لعبد الله بن عمر - يا أبا عبد الرحمن إن أقواما يزعمون أن ليس قدر قال : هل عندنا منهم أحد ؟ قلت : لا قال : فأبلغهم عني إذا لقيتهم إن ابن عمر يبرأ إلى الله منكم وأنتم براء منه ثم قال : حدثني عمر ابن الخطاب قال : بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه و سلم في أناس إذ جاء رجل ليس عليه سحناء سفر وليس من أهل البلد يتخطى حتى ورد فجلس بين يدي رسول الله صلى الله عليه و سلم فقال : يا محمد ما الإسلام ؟ قال : الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وأن تقيم الصلاة وتؤتي الزكاة وتحج البيت وتعتمر وتغتسل من الجنابة وأن تتم الوضوء وتصوم رمضان قال : فإذا فعلت ذلك فأنا مسلم ؟ قال : نعم قال : صدقت وذكر الحديث بطوله في السؤال عن الإيمان والإحسان والساعة/ أخرجه ابن خزيمة في صحيحه
ஒரு நாள் நாங்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தோம், அப்பொழுது ஒரு மனிதர் எங்கள் முன் தோன்றினார். அவர் ஒரு பயணியைப் போன்றும் தோற்றமளிக்கவில்லை. இருந்த போதிலும், உள்ளுர் வாசியாகவும் அவர் விளங்க வில்லை. வந்த அந்த மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி உட்காந்து இவ்வாறு கேட்டார். முஹம்மது அவர்களே! இஸ்லாம் என்றால் என்ன? என்று சொல்லுங்கள் என்றார். இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது அவர்கள் அந்த அல்லாஹ்வின் இறுதித் துதர் என்று சான்று பகர்ந்து, தொழுகை, ஜகாத்,இயலுமானால் அல்லாஹ்வின் இல்லமான மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜு மற்றும் உம்றா செய்வதும் கடமையான குளிப்பை குளிப்பதும் வுழுவை முழுமையாக  செய்வதும் ரமழானில் நோன்பு நோற்பதும் ஆகும் என்று கூறினார்கள்   
அறிவிப்பவர் உமர் (ரலி) 
நுால் இப்னு குஸைமா (01)
ஜிப்ரீல் அலை அவர்கள் முஸ்லிம்கள் அறிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் குறித்து கேள்வி கேட்க அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நீண்ட இந்த ஹதீஸில்  இஸ்லாம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது அவர்கள் அந்த அல்லாஹ்வின் இறுதித் துதர் என்று சான்று பகர்ந்து, தொழுகை, ஜகாத்,இயலுமானால் அல்லாஹ்வின் இல்லமான மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜு மற்றும் உம்றா செய்வதும் கடமையான குளிப்பை குளிப்பதும் வுழுவை முழுமையாக செய்வதும் ரமழானில் நோன்பு நோற்பதும் என்று நபிகள் நாயகம் பதில் கூறினார்கள்  வுழு என்பது இஸ்லாத்தின் ஒரு சின்னம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.  வுழுவையும் இஸ்லாத்தின் ஒரு அங்கமாக நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் இந்த இபாத்துக்கு எவ்வளவு மகிமையும் மான்பும் இஸ்லாத்தில் உள்ளது என்பதை நாம் புறிந்து கொள்ளலாம்.                                                           
ஈமானின் பாதி வுழு
- 556حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ حَدَّثَنَا أَبَانٌ حَدَّثَنَا يَحْيَى أَنَّ زَيْدًا حَدَّثَهُ أَنَّ أَبَا سَلاَّمٍ حَدَّثَهُ عَنْ أَبِى مَالِكٍ الأَشْعَرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ. وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلآنِ - أَوْ تَمْلأُ - مَا بَيْنَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَالصَّلاَةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا ».أخرجه مسلم
தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்."அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். "சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி' (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் சான்றாகும் பொறுமை ஒரு வெளிச்சமாகும் குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும் மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.                                                                          அறிவிப்பவர் அபூமாலிலிக் அல்அஷ்அரீ (ரலி).
நுால் முஸ்லிம் 381
                                                                       

இஸ்லாத்தை ஏற்றவரிடம் இருக்க வேண்டிய இறைநம்பிக்கையின் ஒரு அம்சமாக தூய்மையை இஸ்லாம் சொல்லியிருப்பது இஸ்லாம் தூய்மைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளது என்பதற்கு சான்றாகும். ஈமானின் பாதி தூய்மை என்று நபிகளார் கூறியுள்ளது முஸ்லிம்களை தூய்மையின் பிறப்பிடமாக வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளது.   என்றாலும் இவ்விடத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் வேதனையான விஷத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்    முஸ்லிம்கள் தங்கலளவில் சுகாதாரத்தைப் பேனினாலும் பொது சுகாதாரம் விடயங்களில்  முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அல்லாஹ்வைத் தொழ கட்டப்பட்ட பள்ளிவாசல்களில் உள்ள பொதுக்கழிப்பறைகள் சித்ரவதைக் கூடங்களாகவே இருக்கின்றன.கழிவறைகளில் தண்ணீரே வருவதில்லை. உள்ளே நுழைய முடியாத அளவுக்க துர்நாற்றம் வீசுவதால், யாரும் அதைப் பயன்படுத்துவதில்லை. இதனால், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். பள்ளிவாசல்களில் பனிக்கமர்த்தப்ட்டுள்ள முஅத்தின்மார்கள் அதான் சொல்லுவதுடன் எனது வேலை முடிந்து விட்டது என இருக்கின்றனர்.பள்ளி நிர்வாகத்தினர் இதில்  கூடுதல் கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளனர் 

                                                                                       தொடரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger