இஸ்லாம் கூறும் குடும்பவியல் (03)
உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்
தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)
கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை
ஆண்கள் மத்தியிலும்
பெண்கள் மத்தியிலும் பாலியல் விஷயத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற
முறையாகும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண் எத்தனை பேருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம்,
எப்படி வேண்டுமானாலும் வாழலாம், இது எங்களது உரிமை, சுதந்திரம், யாரும்
கட்டுப்படுத்தக்கூடாது என்ற முறையாகும். இந்த மாதிரி எல்லோரும் போனால் குடும்பம்
எப்படி இருக்கும்? கணவன், மனைவி என்ற உறவு இங்கு இல்லாதிருக்கும் வாழ்க்கையில்
குழந்தைகளுக்கு யார் பொறுப்பு? சமூகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல்
வாழலாம் என்ற சித்தாந்தமும் இன்று உலகில் வந்துள்ளது. இந்த நவீன யுகத்திலே
நீதிபதிகள் இதற்கு அங்கீகாரமும் அளித்துள்ளனர்.