பிறர் மானம் காப்போம் (01)

Wednesday, July 13, 2011



பிறர் மானம் காப்போம் (01)



முகம்மது கைஸான் ( தத்பீகி )


மானத்தின் முக்கியத்துவம்

மனிதனின் மானம் வானம் போல் பெரியது மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் அத்திப்பழத்தின் விதையை விடவும் சிறியவை. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊரிய குணாதிசியங்கள். மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான்' என்பார்கள் நம் முன்னோர்கள். மானம் மலையேரும் போது மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒழிந்து கொள்கிறான். தன்மானம்; காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்கின்றான்.

ஆதி மனிதர்களான ஆதம் அலை ஹவ்வா அலை ஆகிய இருவரும் சுவர்க்கத்தில் தங்க வைக்கப்பட்ட போது இறை கட்டலையை மீறினார்கள் அதன் விலைவால் அவர்களின் வெட்கத்தலங்கள் தெரிந்தன.உடனே இருவறும் பொங்கி எழுந்து நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விலைந்ததாக குர்அன் கூறுகின்றது.
அவர்களிருவரும் அம்மரத்தினை சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்கு தெரிந்தன. அவ்விருவரும் சுவர்க்கத்தின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்.
ஆல்குர்ஆன்: 7:22

அவ்வாறே அறியாமைக்காலத்து அறப்புக்கள் கூட தங்கள் மானத்தை  பெரும் செல்வமாக மதித்துள்ளனர். அறியாமைக்கால புலவர் ஒருவர் தன் மானத்தின் மகிமையை கவிதையில் வடித்துள்ள விதத்தைப் பாருங்கள்.!


மானம் அனைத்திலும் உயர்வானது! செல்வம் வைரூரியம் ஆகியவற்றை விடவும் விலை மதிப்பற்றது. மானம் இல்லாத செல்லவம் சுபிட்ச்சம் அற்றது.என் செல்வத்தால் என் மானத்தைக் காப்பேன்.ஒரு போதும் அதை நான் கலங்கப்படுத்த மாட்டேன்.என் செல்வம் பறிபோனால் தந்திரத்தை கையாண்டு அதை திரட்டுவேன்.என் மானம் மலையேறினால்  தந்திரங்களால் அதை காக்க முடியாது. மானம் கெட்ட பிறகு என் செல்வத்தால் என்ன பலன்.இல்லை உயிர் வாழ்ந்தே என்ன பலன்.

இருண்ட வாழ்க்கை வாழ்ந்த அந்த அறபியர்கள் கூட தங்கள் மானத்தை பெரும் செல்வமாக மதித்துள்ளார்கள் என்பதை இது உணர்துகின்றது.
இஸ்லாத்தின் மூன்றாம் கலீபா உத்மான் (ரலி) அவர்கள் தன்னைப் பற்றி குறிப்பிடும் போது
அல்லாஹ் மீதானையாக நான் அறியாமைக்காலத்திலோ இஸ்லாத்தை ஏற்ற பின்போ விபச்சாரத்தை ஏரெடுத்தும் பார்த்தில்லை  எனக்குறிப்பிடுகிறார்.

மானம் என்பது காக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை அன்னார் உணர்ந்த காரணத்தினால் மானத்தை காவு கொள்ளும் தீய செயல்களை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார்கள்.

எனவே மான உணர்வு என்பது மனித இனத்துடன் ஒட்டிப் பிறந்த பன்பாகும்.நிறஇ குலஇ இனஇ மொழி மத பேதங்களைத் தாண்டி மனித ரத்தங்களில் ஊறிப் போய் உள்ள இயற்க்கை உணர்வே மான உணர்வாகும்.
எனவேதான் இஸ்லாம் மனிதனின்உணர்வுகளுக்கு அதிகம்மதிப்பளித்து மனிதனின் மானத்தை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கின்றது. மனிதனின் கற்புக்கும் உயிருக்கும் உடமைக்கும் மான மரியாதைக்கும் இஸ்லாம் பல் வேறு வழிகளில் பாதுகாப்பு அரணை வழங்குகியுள்ளது. இஸ்லாம் மனிதனின் கண்னியத்தை காத்ததைப் போன்று  உலகச்சமயங்களில் வேறு எந்தச்சமயங்களும் அவனது கண்னியத்தை காத்து அவனது சாந்தமான வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கவில்லை.

புனித மிக்க மானமும் புனித மிக்க கஃபாவும்

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போதுஇ தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:

'இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்;த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர்உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும.;'
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி)
ஆதாரம் : புகாரி 1652

மனிதனின் கண்னியத்தை நபிகள் நாயகம் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இனையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

இறை ஆலையமான கஃபாவையும் அதைச்சூலவுள்ள புனிதப்பகுதியையும் மதிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே தன் சகோதர முஸ்லிமின் கண்ணியத்தை பேணுவதும் கடமையாகும் என்பதை நபிகளாரின் உவமை உணர்த்துகின்றது.

மக்காவுக்குச் செல்லும் முஸ்லிம்கள் ஒரே விதமான வெள்ளை ஆடை தரித்துஇ தங்களுக்கிடையே எந்த வித நிறஇஇன மொழி பேதத்தையும் ஏற்படுத்தாமல் கஃபாவை வலம் வருகின்றனர்.
சண்டை சச்சறவு இல்லாமல் பயிர் பச்சைகளைக் கிள்ளாமல் உயிர்ப் பிராணிகளை வேட்டையாடாமல் அதன் புனிதத்துவத்தை மதிக்கின்றனர்.                          
இவ்வாறு மக்கா நகரத்தின் புனிதத் தன்மையை மதிக்கும் கணிசமான முஸ்லிம்கள்இ தன் சகோதர முஸ்லிமின் மானம்இ மரியாதை விடயத்தில் அக்கரை செலுத்துவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் தூங்கும் போது கிப்லாவை நோக்கி கால்களைக் கூட நீட்டக் கூடாது(?) என எள்ளை கடந்து அதன் புனிதத்தை மதிக்கும் முஸ்லிம்கள் தன் சகோதர முஸ்லிமின் மானம் மரியாதைவிடயத்தில் கால் தூசு அளவு கூட அக்கறை செலுத்துவதில்லை.                       
காரணம் மக்கா நகரத்தின் புனிதத்தை உணர்ந்த இவர்கள்இ மனிதனின் கண்ணியம் எவ்வளவு புனிதமானது என்பதை உணரவில்லை. அல்லது அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.
ஒரு முஸ்லிமின் கண்ணியத்திலும் மானம் மரியாதையிலும் அத்து மீறுவது மக்கா நகரத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்கு ஈடாகும் என்பது இந்த நபி மொழியின் சாறமாகும்.
எனவேஇ இதயத்தில் ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் தனது சகோதர முஸ்லிமின் மான மரியாதையில் விளையாடத் துணிய மாட்டான்.

இன்ஷா அல்லாஹ் வளரும்...

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger